பயங்கரவாதிகள் தமிழர்களையும் மற்றும் வெளிநாட்டவர்களையும் இலக்கு வைத்தனர்..

 2 1

பயங்கரவாதிகள் தமிழர்களையும் மற்றும் வெளிநாட்டவர்களையும் இலக்கு வைத்தனர்; சிங்களவர்கள் எச்சரிக்கையை புறக்கணித்தனர் – டிரம்ப்பிக்கான தமிழர்கள்

பயங்கரவாதிகள் தமிழர்களையும் மற்றும் வெளிநாட்டவர்களையும் இலக்கு வைத்தனர்; சிங்களவர்கள் எச்சரிக்கையை புறக்கணித்தனர் – டிரம்ப்பிக்கான தமிழர்கள் .

தமிழர்கள் மீதான பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பின்னர், டிரம்ப்பிக்கான தமிழர்களின் செய்தித் தொடர்பாளர்களால் வழங்கப்பட்ட பின்வரும் அறிக்கை:

இலங்கையில் சமீபத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் தமிழ் மக்கள் வசிக்கும் பகுதிகளிலுள்ள மூன்று தேவாலயங்களை இலக்காகக் கொண்டிருந்தன.

கொச்சிக்கடை, மட்டக்களப்பு மற்றும் நீர்கொழும்பு ஆகிய இடங்களில் அந்த தேவாலயங்கள் அமைந்துள்ளன. பயங்கரவாதிகள் இந்த மூன்று தேவாலயங்களை இலக்காகக் கொண்டனர்.

பாதிக்கப்பட்டவர்களில் 70% க்கும் மேற்பட்டவர்கள் தமிழர்கள்.

வெளிநாட்டவர்கள் தங்கள் விடுமுறை நாட்களில் அல்லது வணிக விஜயத்தில் தங்கியிருந்த மூன்று பிரபல விடுதிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

ஊடக ஆதாரங்களின்படி, நடந்து முடிந்த பயங்கரவாத தாக்குதல்கள் பற்றி ஒரு எச்சரிக்கை ஜனாதிபதி சிறிசேனவுக்கு கொடுக்கப்பட்டு இருந்தது. இது இந்தியாவினாலும் அமெரிக்காவினாலும் எச்சரிக்கப்பட்டது. இந்த தகவலை இலங்கை அதிகாரிகளால் புறக்கணிக்கப்பட்டது.

பயங்கரவாதிகளால் தமிழர்களது தேவாலயங்களில் தமிழர்கள் மீதான தாக்குதலை நடத்தும் என்று நம்பட்டதால் , சிங்கள அதிகார்களுக்கு இது சரியானது போல் தெரிந்ததால், இந்த எச்சரிக்கையை புறக்கணித்தது.

தமிழர்கள் ஐக்கியப்பட்ட, பிரிக்க முடியாத மற்றும் ஒன்றுபட் ட ஸ்ரீலங்காவின் பாதுகாப்புக்குள் வாழ முடியாது என்பதை இது காட்டுகிறது. பயங்கரவாதிகள் அல்லது சிங்களவர்களால் வரும் எந்தவிதமான தாக்குதல்களாலும் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாத சிங்களவருடன்

தமிழர்கள் வாழ விரும்பவில்லை.

சர்வதேச சமூகமும், குறிப்பாக அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் யு.என்.எச்.ஆர்.சி. தீர்மானம் என்ற பெயரில் தமிழர்களை புறக்கணிக்கக்கூடாது. காலத்தை தாமதிக்க வேண்டாம்.

தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை வழங்குவதற்கான சிறந்த நேரம் இதுவே, எனவே தமிழர்கள் தங்களது சொந்த நாட்டில், வடகிழக்கு இலங்கையில் தங்களைப் பாதுகாத்து தனிமையில் வாழ முடியும் என்று உலக நாடுகளுக்கு மின்னஞ்சல்கள் மூலம் தெரிவிக்கப்பட்டது என டிரம்ப்பிக்கான தமிழர்களின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

Be the first to comment on "பயங்கரவாதிகள் தமிழர்களையும் மற்றும் வெளிநாட்டவர்களையும் இலக்கு வைத்தனர்.."

Leave a comment

Your email address will not be published.


*